Friday, May 15, 2015
Thursday, May 14, 2015
WIFE's INTERNAL WORK IS HARD THEN HUSBEND's EXTERNAL WORK...
கணவன் மனைவி படிக்க வேண்டிய அழகான குட்டிக்கதை.. ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார். ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எ...திர் சவால்விட்டாள். கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.. அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே! இலையில் வைத்த ‘ஜாங்கிரியை’ மூத்தவனுக்கு பிடிக்கும்என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம். ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? எல்லாம் கியா முய என்று கத்தி தொலையுதுங்க அத்தனையும் குரங்குகள்.! சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது.. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.. பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே... என்று பாய.... அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா... என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.! விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற.. ஓஹோ, அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க... அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை. இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்ஒரு பெண்ணின் பங்கு தலையாயது. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது.. இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால் தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்...
NATION IS GOING ON WRONG WAY.......
படித்து சிந்தனை செய் மனமே!!!
இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..
ஒன்றில் எப்பவுமேரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....
உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..
ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்....
.உண்மை தான் என்றோம்
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது...
ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது....
இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...

RISKY JOB FROM OUR ELDERS.....
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் ...அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .
உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.... கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி…

DANGER..........
உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா? ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!
இப்போதெல்லாம் தமிழகம் முழுவதும் இன்வர்ட்டர்கள் உபயோகிக்காதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சமயங்களில் உடனடியாக தானாகவே பேட்டரியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கரண்ட்டிலிருந்து மின்விசிறி, ஒரு சில லைட்டுகள் உள்பட வேலை செய்யக் கூட இன்வர்ட்டர் உபயோகிக்கிறோம். அதுவும் கோடைக்காலம் நெருங்க நெருங்க இன்வர்...ட்டரின் தேவை மிக அத்தியாசவசியமாகிறது. எல்லா மின் சாதனங்களைப் போலவும் இன்வர்ட்டரிலும் ஒரு சில ஆபத்துகள் உள்ளன.
எல்லா மின் சாதனங்களை விடவும் இதில் மறைமுகமான ஆபத்து ஒன்றும் இருக்கிறது. நித்து என்பவர் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக இருக்கும். அண்மையில் ஒருநாள்.. வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வரும் போதே வீட்டினுள் துர்நாற்றம் அடிப்பதாகப் புகார். “தெருவிலே குப்பைத்தட்டி பக்கத்துலே போகும் போது நாறுகிற மாதிரி இருக்கிறது” என்பது மகனின் கம்ப்ளைண்ட். எங்களுக்கு ஜலதோஷம் இருந்ததால் அப்படி எதுவும் வித்தியாசம் தெரியவில்லை. இரவு தூங்கி எழுந்து காலையிலும் அதே ஆர்ப்பாட்டம் செய்தான். அன்று மாலையும் மீண்டும் அதே ஆர்ப்பாட்டம். அப்போது தான் எனக்கும் அந்த துர்நாற்றம் லேசாக நுகர முடிந்தது.
கணவரிடம் இன்வர்ட்டர் பாட்டரியின் கீழே பல்லி எதுவும் இறந்து கிடக்க வாய்ப்புண்டு. நகர்த்திப் பாருங்கள் என்று கூறினேன். சிறிது நேரத்தில் பாட்டரி அருகில் ஃபேன் ஒன்றை வைத்திருந்தார் கணவர். “பேட்டரி ஓவர் ஹீட் ஆகிவிட்டது போல. அதான் அந்த துர்நாற்றம்” என்றார் அவர். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து பார்த்தால்… பேச்சு மூச்சு இல்லாமல் கணவர் மயங்கிக் கிடந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்தும் பயன் இல்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தோம். என்ன காரணத்தினால் மயங்கி விழுந்தார் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை.
திடீரென்று பாடத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. பேட்டரி ஒவர் ஹீட் ஆனால் ‘ஹைடரஜன் சல்ஃபேட்’ வாயு உற்பத்தி ஆகும். அழுகிய முட்டையின் துர்நாற்றத்தை ஒத்திருக்கும் அந்த வாயுவை சுவாசித்தால் கண்ணிலும், மூக்கிலும் எரிச்சலை ஏற்படுத்தும். அடுத்து நுரையீரலிலும் பரவும். இருமல் ஆரம்பிக்கும். மயக்கம் ஏற்படும்.. அடுத்த ஓரிரு மணி நேரங்களில் மரணம் என்பதெல்லாம் நான் கூகுளில் தேடிக் கண்டுபிடித்து அதிர்ந்த தகவல்கள். நுரையீரலின் அளவு பெரியவர்களுக்கு அதிகம் என்பதால், குழந்தைகளை விட இது பெரியவர்களை தான் அதிகம் பாதிக்குமாம். மருத்துவரிடம் இதுகுறித்து கூறினேன். மருத்துவரின் தீவிர சிகிச்சையினால் சிறிது நேரத்திலேயே கணவர் நல்லபடியாக கண் விழித்தார். “பேட்டரியை நகர்த்தும் போது ஓவர் ஹீட் இருக்கிறது தெரிந்தது. அதிலேர்ந்து தான் அந்த கெட்ட நாத்தமும் வருதுன்னும் புரிஞ்சிச்சு. எல்லோரும் வெளியிலே போயிடலாமுன்னு யோசிக்கிறதுக்குள்ளே மயக்கம் வந்திடுச்சு” என்றார் கணவர்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினோம். வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு இருமத் தொடங்கினார். இப்படிப்பட்ட பாதிப்புகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்காவது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் என்று கூகுளில் தேடியதில் தகவல் கிடைத்தது. ஆனாலும் மூன்று நாட்களுக்குப் பிறகும் இருமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்போது அதற்கான மருந்துகளை கணவர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த அதிர்ச்சித் தகவல் குறித்த செய்தியை பகிர்ந்த போது இன்வர்ட்டர் விற்பனையாளர் ஒருவர் கூறிய சில அட்வைஸ்கள் : எந்தவொரு மின் பொருள் என்றாலும் அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். இன்வர்ட்டர் வாங்கும் போது அது ஒழுங்கான நிறுவனத்துடையதா என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். தரமற்ற சீனத் தயாரிப்புகள் எல்லாம் மார்க்கெட்டில் சல்லிசான விலையில் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கினால் சமயங்களில் ஓவர் ஹீட்டில் பேட்டரி வெடித்துச் சிதறும் வாய்ப்பெல்லாம் கூட உண்டு. காற்றோட்டமான இடத்தில் இன்வர்ட்டர், பேட்டரிகளை வைக்க வேண்டும். பேட்டரிகளை முழுக்க மூடி வைக்கக் கூடாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது இன்வர்ட்டரில் தண்ணீர் இருக்கிறதா, ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை முறையாக பயிற்ச்சி பெற்ற நபரை வைத்து பார்த்துக் கொள்ள வேண்டும். கோடைக்காலங்களில் தொடர்ந்து எந்நேரமும் இன்வர்ட்டர் பயன்பாட்டிலேயே இருக்கும் சமயங்களில் நடுவில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதும் நல்லது.
படித்தேன் பகிர்ந்தேன்.... பயனென்று நினைத்தால் பகிருங்கள்....

Subscribe to:
Posts (Atom)