Monday, November 30, 2015


உணர்வுகள் :          part 3

செல்வம் , ப்ரியாவின் தாய்மாமன் என்றபோதிலும் தன் உயிராகவே ப்ரியாவை வளர்த்தான் . ப்ரியாவின் தந்தை மறைந்தபோது  வயது 10.
அம்மாவின் பாசம் மட்டுமே அவளுக்கு கிடைத்தது .
"அம்மா .. பள்ளிக்கு போகணும் . எதாவது சாப்ட தர்றியா ?" பிரியா கேட்டதும் கண்கலங்கும் அவள் அம்மா . "இன்னைக்கு ஒன்னும் செய்யலம்மா .. சாயன்தரம் அம்மா சமைச்சுதாரேன் ,பொருதுக்கமா " அம்மா சொல்லி கலங்குவதை கண்ட ப்ரியா "பசியோடு புறப்படுவாள் . அப்பொழுது அங்கு வரும் செல்வம் " என்னடா குட்டி பசிக்கு அம்மா எதுவும் செய்யலையா ? வா , நான் கொஞ்சம் பணம் வச்சிருக்கேன் . கடைல இட்லி வாங்கி  சாப்டு போ " இப்படி செல்வம் சொல்லும்போது மனம் நிறைந்தவளாய் பூரித்து போவாள் ப்ரியா . "பரவாஇல்ல மாமா" என்று செல்பவளை கண்டிப்புடன் பசியமர்த்தி அனுப்பிவைப்பான் .
ப்ரியாவின் மனதில் செல்வம் எப்பவும் தெய்வமாக மதிக்கப்பட்டான் .
ஒருநாள், மாலை ஆறு மணிக்குமேல் ஆகியும் ப்ரியா பள்ளியிலிருந்து வரவில்லை .
பதறிப்போன அம்மா செல்வத்திடம் போய்  தேடிவரும்படி கதறினாள் ...

( தொடரும் )

No comments:

Post a Comment