Tuesday, July 12, 2016

திருப்பதியில் உள்ள ஏழு மலைகளின் பெயர்கள்

திருப்பதியில் உள்ள ஏழு மலைகளையும் அதன் பெயர்களையும் தெரிந்து கொள்ளலாம்.

1. வேங்கட மலை: 

‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’.

பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர்.

இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.

2. சேஷ மலை:

பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார்.

இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.

3. வேதமலை:

வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன.

எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.

4. கருட மலை:

இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார்.

அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.

5. விருஷப மலை:

விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான்.

அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.

6. அஞ்சன மலை:

ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை.

தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள்.

அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள்.

இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.

7. ஆனந்த மலை:

ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார்.

இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார்.

இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர்.

இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.

No comments:

Post a Comment